ஸ்ரீமுஷ்ணம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. முருகுமாறன் ஆறுதல்



ஸ்ரீமுஷ்ணம் . ஜூலை 29 ;

கடலூர் மாவட்டம்  ஸ்ரீமுஷ்னம் கிழக்கு ஒன்றியம் பேருர் கிராமம் சாவடி தெருவில் ஏற்ப்பட்ட திடீர் தீ விபத்தில் ஜோதிலட்சுமி , க/பெ.வேலுமணி என்பவரது வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது , இந்நிகழ்வு  அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது, சம்பவம் அறிந்து அதிமுக கழக அமைப்பு செயலாளரும் காட்டுமன்னார் கோயில் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமாகிய என்.முருகுமாறன் தீ விபத்தில் வீடு மற்றும்  உடமைகளை இழந்த ஜோதிலெட்சுமி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார் , சட்டமன்ற உறுப்பினருக்கு ஜோதிலெட்சுமி குடும்பத்தினர் நன்றிகளை தெரிவித்து கொண்டனர் ,  இதில் ஸ்ரீமுஷ்னம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி பிரகாஷ், காட்டுமன்னார்கோயில் மேற்க்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் ஒன்றிய பெருந்தலைவர் லதா ஜெகஜீவன்ராம் ஒன்றிய கவுன்சிலர் அழகுரோஜா ,
ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன்  மற்றும் குடிகாடு ரமேஷ் ஆகியோர்   உடனிருந்தனர்.