கொடைக்கானல் சுற்றுலா தல கடை வியாபாரிகள் வறுமையில்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாநில அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் மாதத்திற்கான கொரானா ஊரடங்கை எதிர்நோக்கியுள்ள கொடைக்கானல்,  இந்த ஊரடங்கை சந்திப்பது மிகவும் சவாலானது. 
முற்றிலும் சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ள கொடைக்கானல் நகராட்சி மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளுக்கு கூட கஷ்டப்படும் சூழல் உச்சத்தை எட்டியுள்ளது. 
கஷ்டத்தை சொல்ல முடியா சூழலிலேயே 99 % மக்கள் உள்ளனர். வேலையின்மை , வறுமை.  வறுமை என்னும் கொடுமை மனிதனை சூழ்ந்து ஆட்டிப்படைக்கிறது இதனால் பலரது வாழ்க்கைப்பாதை மாறும் சூழல் உருவாகியுள்ளது  இதனால் பலர் புது நோய்களுக்கும்  ஆட்படும் சூழலும் உள்ளது.
பல வாகன உரிமையாளர்கள், கடை உரிமையாளர்கள் கூலி வேலைக்கு செல்ல விரும்பினாலும்,வேலை இல்லா சூழலே உள்ளது. அனைவரது நிலையும் செய்வது அறியாது திக்கு திசை தெரியாமல் அனாதையாக விடப்பட்ட நிலையில் உள்ளர்கள் 
தன்னார்வலர்கள், கோடை நல விரும்பிகள்,சமூக  ஆர்வலர்கள், சமய சமூக சங்கங்கள், அரசியல் அமைப்புக்கள் என அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரமிது. பதவி, அதிகார இடத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் கட்சிகளை மறந்து மக்கள் பணியாற்ற வேண்டிய நேரமிது
மக்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை, உரிய அதிகாரிகள் மூலம் தெரிவித்து இந்த சோதனை காலத்தை உயிர் சேதங்களின்றி கடக்க முயற்சி செய்வேண்டும் 
அரசும் மக்கள் நிலையை உணர்ந்து உதவித்தொகை, வட்டியில்லா திரும்ப செலுத்தும் கடனுதவி, அத்தியாவசிய பொருட்கள் உதவி என வழங்கினால் மட்டுமே கொடைக்கானல் மக்கள் இந்த கடுமையான  கொடுமையானா  வறுமையான காலத்தை கடக்க முடியும் என கொடைக்கானல் மக்களும் சுற்றுலா தல கடைக்காரர்களையும் காப்பாற்றமுயற்சி செய்யுங்கள் என தமிழக அரசையும் சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கும் கொடைக்கானல் சுற்றுலா தல சங்க செயலாளர் திரு காஜா அவர்கள் வேண்டுகோள் விடுத்துஉள்ளர்

Comments