செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் கார்கில் நினைவு தினத்தை ஒட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு பாரதிய ஜனதா
மாநில தலைவர் எல்.முருகன் அறிவுறுத்தல் படி, மாவட்ட தலைவர் வி.பலராமன் ஒப்புதல்லுடன்,செங்கல்பட்டு நகர தலைவர் எல். பிரகாஷ் தலைமையில் கார்கில் போர் வீரர்கள் நினைவு நாள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் செங்கல்பட்டு பொது செயலாளர்கள் வி.ஜனார்த்தனன், கார்த்திக்,மற்றும் துணைத்தலைவர்கள் கண்ணன்,சௌபாக்ய, ரோகெஷ் மற்றும் செயலாளர்கள் கோவிந்தன்,வெங்கடாச்சலம்,மணிகண்டன் மற்றும் பொருளாளர் s.சுந்தரபாண்டியன் அவர்களும் முன்னாள் நகர தலைவர் ராஜேந்திர குமார்,பார்வையாளர் நரேந்திரன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் திருமதி.மகேஷ்வரி அவர்களும்,RSS மாவட்ட சேவா பிரமுக் C.ஐயப்பன் மற்றும் ஹிந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் C.K. அன்னை ராஜ்,C.R.ராஜா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.