அரசூர் விஆர்எஸ். பொறியியல் கல்லூரியில் கொரோனா வார்டில் திடீர் சோதனை

திருவெண்ணெய்நல்லூர் ஜூலை-29

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட அரசூர் விஆர்எஸ்.பொறியல் கல்லூரியில் கூடுதல் வட்டார வளர்ச்சி இயக்குனர் மகேந்திரன் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார் மற்றும் முபாரக்அலி முன்னிலையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களை  தங்க வைக்கப்பட்டுள்ள வார்டு பகுதிகளில் நேரில் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் முகக் கவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். உணவகங்களில் பாதுகாப்பான முறையில் சமைக்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர் கொரோனா நோய்தொற்று அறிகுறியால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அவர்கள் கூறிய குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தரப்படும் என்று உறுதியளித்தார். இதில் தலைமை மருத்துவர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Comments