திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் வீடு தீப்பற்றியது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பெரியசெவலை கிராமத்தில் மின்கசிவு காரணமாக முருகேசன் மகன் மூர்த்தி(45) என்பவரின் வீடு தீப்பற்றியது. அப்போது வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து அருகிலிருந்த முருகேசன் மகன் குமார்(40), தனபால் மகன் ஏழுமலை(65) ஆகியோரின் அடுத்தடுத்த வீடுகள் தீ பற்றியது. தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை முழுமையாக அணைத்தனர்.