தர்மபுரி ரோட்டரி மிட்டவுன் சங்கத்தின் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம்

தர்மபுரி ரோட்டரி மிட்டவுன் சங்கத்தின் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் தர்மபுரி 4 ரோட்டில்  பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் கபசுரக் குடிநீர்  ரோட்டரி  மிட்டவுன் சங்க தலைவர் வெங்கடேஷ் செயலாளர் குமரன்  அவர்கள் வழங்கினார் தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா  தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது பென்னாகரம் மாரண்டஅள்ளி பாலக்கோடு பாப்பிரெட்டிப்பட்டி அரூர் பாப்பாரப்பட்டி காரிமங்கலம் நல்லம்பள்ளி தர்மபுரி போன்ற பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது இதனால் தர்மபுரி போக்குவரத்து பிரிவு துறை சார்பில்   பொதுமக்களுக்கு இலவச முக கவசம் போக்குவரத்து காவல்துறை  உதவி ஆய்வாளர் சின்னசாமி மாது ரகுநாதன் இவர்கள் இலவச முக கவசம் வழங்கப்பட்டது காவல்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு தனித்திரு விலகிய வீட்டிலேயே இரு என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் சிவராமன் இன்பன் கோவிந்தராஜ் கிருஷ்ணன்  அன்பழகன் அசோக் சரவணன் சாந்தகுமார் லட்சுமணன் இளவரசன் இவர்கள் பொதுமக்களுக்கு 200 பேருக்கு  கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது  கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு தொடர்ந்து  உழவர் சந்தைக்கு கிருமிநாசினி  தெளிப்பான் இயந்திரம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது இதேபோன்று பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்

Comments