கொரோனா சிகிச்சையில் இருந்த தூய்மைபணியாளர் சிகிச்சை பலனின்றி பலி

சாத்தூர் ஜூலை 30, கொரோனோ சிகிச்சையில் இருந்த தூய்மை பணியாளர் சிகிச்சை பலனின்றி பலி.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் அருந்ததியர் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சின்னநாராயணன் (70)    இவர்  மேட்டமலை ஊராட்சியில் தூய்மை பணியாளராக  பணியாற்றி வருகிறார்.   
 இவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது அதற்கு சாத்தூர் அரசு மருத்துமணையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.   
சின்ன நாராயணனுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருக்கவே அவருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில்  அவருக்கு  கொரோனா தொற்று உறுதியானது.   
 அவரை சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்து மணைக்கு அழைத்து செல்வதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.    
சின்ன நாராயணனுக்கு மூச்சு திணறல் ஏற்படவே  மதுரை அரசு மருத்துவமணை அழைத்து  சென்றுள்ளனர்.மதுரை அரசு மருத்துவமனையில் சின்ன நாராயணன் சிகிச்சை பலனின்றி  இறந்து விட்டார்.இது சம்பந்தமாக சின்ன நாரயணன் குடும்பத்திற்க்கு சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
மேலும் சின்ன நாராயணன் மகன் ராஜ் நம்மிடம் பேசும் பொழுது ஊரடங்கு காலத்தில் 120  நாளாக எங்கள் குடும்பத்தில் யாரும் வேலைக்கு செல்லாத காரணத்தினால் எனது தந்தை சின்ன நாராயணன் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்தோம்.
இன்று கொரோனோ தொற்றால் எனது தந்தை சின்ன நாராயணன் பலியாகிவிட்டார் எனது குடும்பம் மிகவும் வறுமையில் உள்ளது தமிழக அரசு எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Comments