பங்கு தந்தையிடம்வாக்குவாதம் செய்த ஆர்.சி.திருசபை
பக்தர்கள்
சாத்தூர் ஜூலை 28,விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆர்.சி வடக்கு தெருவில் வசித்து வருபவர் அன்பழகன் என்ற ஆரோக்கியராஜ் (45) இவர் முன்பு சாத்தூர் ரோமன் கத்தோலிக்க திருச்சபை (ஆர்.சி) ஆலையத்தில் உள்ள சபையில் உறுப்பினராக இருந்து ஆலையத்திற்கு சென்று அங்கு நடைபெரும் அனைத்து நிகழ்ச்சிகளில் கலந்துள்ளார்.
ஆரோக்கியராஜ் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆர்சி சபையிலிருந்து விலகி பெந்தேகோஸ்தே சபை (ஏஜி) சபைக்கு சென்று சபை நிகழ்ச்சிகளில் கலந்து வந்தார்.காதல் திருமணம் செய்த ஆரோக்கிய ராஜிக்கு ஆர்சி சபையில் கலந்து கொள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபை சட்டம் படி உரிமை இல்லை.
ஆரோக்கியராஜ் உடல் நலம் பாதிக்கபட்டு திங்கள் கிழமை காலையில் இறந்துவிடுகிறார். இறந்தவரின் உடலை சாத்தூர் ஆர்.சி ஆலையத்தின் பங்கு தந்தை மைக்கேல் அவர்கள் இறுதி சடங்குகள் செய்த பின்பு அவரின் உடலை ஆர்.சி ஆலையத்திற்கு சொந்தமான கல்லரை தோட்டத்தில் உடலை அடக்கம் செய்துள்ளனர்.
ஆர்.சி கல்லறை தோட்டத்தில் ஆரோக்கிய ராஜ் உடல் அடக்கம் செய்ததை அதே பகுதியை சேர்ந்த அந்தோணி மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து பங்கு தந்தை வீட்டிற்கு சென்று இறந்த ஆரோக்கியராஜ் வேறு சபையை சேர்ந்தவர் அவருக்கு எப்படி ஆர்.சி கல்லரை தோட்டத்தில் இடம் கொடுத்தீர்கள் என்றும் நீங்கள் பணம் பெற்றுக்கொண்டு தான் அவருக்கு இடம் கொடுத்தீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர்.
அதன் பின்பு வாக்கு வாதம் செய்தவர்களிடம் பங்கு தந்தை மைக்கேல் ராஜ் நான் யாரிடமும் பணம் பெறவில்லை. இதற்கு முன்னால் சாத்தூர் ஆர்சி சர்ச்சில் பங்கு தந்தைகளாக இருந்தவர்கள் என்ன வழி முறையில் செய்தார்களோ அதே வழியை பின் பற்றிதான் அவருக்கு கல்லரை தோட்டத்தில் இடம் கொடுத்தேன் என்று தெரிவித்தார். அதன் பின்பு இரு தரப்பும் பேசி சமாதானம்மாகி சென்றனர்.