செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில்

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நிறுத்தம் செய்ததால் அனைத்து ஊழியர்களும் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் இரண்டாவது முறையாக கார்மெண்ட்ஸ் அண்ட்  சேஷன் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் வாழ்வாதாரம் கருதி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.இந்த மனுவில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான இலவச போக்குவரத்து வசதிகளை செய்திட வேண்டும் என்றும் வேலைகள் செய்யும் இடத்தில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கை கழுவுதல் மற்றும் முகக் கவசங்கள் வழங்குவது பின்பற்ற வேண்டும் என்றும் மேலும் நிறுவனத்தில் கோரனோ வைரஸ் பரவும் பட்சத்தில் அந்த நிறுவனமே பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் எந்த ஒரு தொழிலாளர்களிடமும் covid-19 வைரஸ் காணப்பட்டால் அவர்களுக்கு சரியாக சோதனை செய்து தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக அரசாங்கத்திடம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தொழிலாளர்களை எக்காரணத்தைக் கொண்டும் பணி வேலைகள் மற்றும் கட்டாய பணி நீக்கம் செய்யக்கூடாது என்றும் மேலும் தொழிலாளர் உதவி அனைவரிடமும் தொழிலாளர் துணை ஆணையர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் நிலுவையிலுள்ள எல்சிசி வழக்கு ஆகிய அனைத்து வழக்குகளையும் 30 நாட்களுக்குள் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தொழிலாளர்கள் எக்காரணத்தைக் கொண்டும் வேலையில்லாமல் பாதிக்கப்படக் கூடாது என்றும் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் உடனடியாக இழப்பீட்டு தொகை மற்றும் செட்டில்மெண்ட் வழங்கப்படவேண்டும் என்ற உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கார்மெண்ட்ஸ் அண்ட் பேஷன் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது