கரூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்த 9 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்கு உட்பட்ட வீரியம் பாளையம் ஊராட்சியில் கரூரில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்ற 9 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டு கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் அவர்களுடைய வீடுகளில் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை துணை ஆட்சியர் லீலாவதி தலைமையில் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மகுடேஸ்வரன் முன்னிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அந்த ஊராட்சியில்   உள்ள அனைத்து வீடுகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது இதனால் அப்பகுதி மக்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments