செங்கல்பட்டு அடுத்த நல்லாத்தூர் கிராமத்தில் கடந்த 50 வருடங்களாக குடியிருந்த இடங்களை காலி செய்து வீடுகள்

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த நல்லாத்தூர் கிராமத்தில் கடந்த 50 வருடங்களாக குடியிருந்த இடங்களை காலி செய்து வீடுகள் இடிக்கப்பட்டன இதற்கான மாற்று இடம் கேட்டு பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தின் சார்பாக நல்லாத்தூர் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் கடந்த 50 வருடங்களாக கூடியிருந்த குடியிருப்புகளை கால்வாய் அமைப்பதற்காக காலி செய்யச் சொல்லும் படி வற்புறுத்தி வருகின்றனர் இதன் அடிப்படையில் பல முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தார் மற்றும் அதிகாரிகளிடம் எந்தவித மனு அளித்தும் பயனில்லை எனவும் மேலும் இதற்காக மாற்று இடம் வழங்குவதாக சர்வே எண்117/11 இல் வழங்குவதாக கூறி ஒரு சில மக்களுக்கான வீட்டுமனை மட்டுமே வழங்கப்பட்டது எனவும் இதுவரையிலும் தங்களுக்கு எந்த மாற்று இடமும் வழங்கவில்லை எனவும் மேலும் தாங்கள் தற்போது வசிக்கும் இடத்திற்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லை எனவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக சுமார் 30 குடும்பத்தைச்  சார்ந்தவர்களுக்கு நடவடிக்கை எடுத்து மாற்று இடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர் மேலும் இந்த மனுவை சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க மாநில தலைவர் தமிழன் ஜெகன்  ஆணையின்படி மாவட்ட செயலாளர் அன்சாரி செந்தில் தலைமையில் ஒன்றிய செயலாளர் வல்லிபுரம் சுரேஷ் முன்னிலையில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தனர் இந்த மனு குறித்து மாவட்ட ஆட்சியர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை அளித்துள்ளனர்.