கொடைக்கானல் ஏரியில் 2,75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போடப்படும் கான்கிரிட் நடைபாதை தேவை அற்றது பொதுமக்கள் எதிர்ப்பு.
கொடைக்கானல்
திண்டுக்கல் மாவட்டம்கொடைக்கானல்
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் மைய பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து சென்று ஏரியின் அழகினை கண்டுகழிக்க ஏரியை சுற்றியுள்ள 6 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபாதை மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன
இந்நிலையில் நன்றாக இருந்த நடைபாதையினை அகற்றிவிட்டு புதிதாக 2,75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கான்கிரிட் நடைபாதைகள் அமைக்கும் பணிகளை நகராட்சி ஒப்பந்தக்கார்கள் மூலமாக தீவிரமாக செய்து வருகின்றனர் கொடிய கொரானா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக ஊர் மக்கள் படும் சிரமத்துடன் தொழிலை இழந்து வீட்டினுள் முடங்கி கிடகின்ற வேலையில் மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி சிறிதும் கவலை கொள்ளாத நகராட்சி நிருவாகம் டென்டர் அளித்து ஒப்பந்ததாரர்கள் மூலம் கொடைக்கானல் ஏரியை சுற்றிலும் கான்கிரீட் கலவை மூலம் நடைபாதை போடப்படுவதால் ஏரி மாசுபடும் சூழல் உள்ளதாகவும் ஏரியை சுற்றியுள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து ஏரிக்கு வரக்கூடிய நீர் தடைபடும் நிலை உருவாகும் என்றும் ஏரியின் பல்வேறு பகுதிகளில் உள்ள படகு குளங்களின் அருகில் கடைகள் நடத்திவரும் சிறு வியாபாரிகளின் கடைகள் மலை காலங்களில் சாலையில் தேங்கும் நீர் வெளியேற முடியாமல் கடைகளுக்குள் தண்ணீர் புகும் நிலை ஏற்படும் என்றும் இதனால் ஏரியை சுற்றிலும் கருங்கற்களால் நடைபாதை அமைத்து கொடைக்கானல் ஏரியினை காப்பாற்றிட வேண்டும் என்றும் தற்போது உள்ள கொரோனா காலங்களில் அரசு பணம் வீண்விரையம் செய்யப்படுவதாகவும் எனவே மாவட்ட நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை மேற்கொண்டும் கொடைக்கானல் ஏரியின் தூய்மை கெடாமல் பாதுகாத்திட நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வேதனையுடன் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர் .