கலாம் நினைவு நாளில் கனவு மாணவர் விருது 2020

கலாம் நினைவு நாளில் கனவு மாணவர் விருது 2020

அப்துல் கலாமின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து தனித்திறமைகள், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனைகள் செய்து வரும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு கனவு மாணவர் விருது 2020 வழங்கி ஊக்குவிக்கப்பட்டது. அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் ஜெயராஜ் தலைமையில் இணையத்தளம் வழியாக நடைபெற்ற இந்நிகழ்வை அப்துல் கலாம் அறக்கட்டளையின் மாநில துனை தலைவர் வின்சென்ட் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், நியூஸ் 18 முதன்மை நெறியாளர் பாலவேல் சக்கரவர்த்தி, செண்டு பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர், புதிய தலைமுறை தொலைக்காட்சி நெறியாளர் தம்பி தமிழரசன், அன்பு அறக்கட்டளை நிறுவனர் அன்பு குமார், கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி தயாரிப்பாளர் திவ்யநாதன்,  ஜெத்தா தமிழ்ச் சங்கம் சீராஜ் மைதீன், Hope3 பவுண்டேஷன் பழனியப்பன், சீட்ஸ் அமைப்பு நிவேதிதா மற்றும் சிறார் எழுத்தாளர் விழியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துரையுடன் விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்தினர். இறுதியாக அறக்கட்டளையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்பாண்டியன் நன்றியுரை கூறினார். இணையதளத்தின் வழியாக நடைபெற்ற இந்நிகழ்வை அறக்கட்டளையின் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஹரி பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
அறக்கட்டளையின் புதிய முயற்சியை விருந்தினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

Comments