ஆம்பூர் அருகே 15 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி வந்த திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
வேலூர் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருப்பவர் அகரம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் மீது ஏற்கனவே மணல் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, சூதாட்ட கிளப் நடத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்து நிலையில் தற்போது அகரம் கிராமத்தைச் சேர்ந்த செவிலியரான தேவி என்பவரை கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்ற முயலவதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் வேப்பங்குப்பம் காவல் நிலையம் என பல்வேறு இடங்களில் புகார் தரவே தற்போது தலைமறைவாக உள்ள சுதாகரை கைது செய்து தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வேப்பங்குப்பம் காவல் நிலையம் முன்பு இளம்பெண் தேவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Comments
Post a Comment