ரூபாய் 10,000 தவறவிட்ட பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த மனிதநேயம் மிக்க மனிதர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜுலை 29 ‌           ஆம்பூரில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் ரூபாய் 10,000 தவறவிட்ட பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்த மனிதநேயம் மிக்க மனிதர் பாராட்டி ஆம்பூர் ஸ்டேட் பாங்க் சான்றிதழ் வழங்கியுள்ளது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த ஜாகீர்உசேன் தோல் வியாபாரம் செய்து வருகிறார்   இவர் நேற்று மாலை  5:30 மணிக்கு ஆம்பூர் எம் சி ரோடு பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஏடிஎம் பணம் எடுக்க சென்றுள்ளார் அங்கு இவருக்கு முன்னதாக நின்றவர் பணத்தை எடுத்து விட்டு அதில் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏடிஎம் இயந்திரத்தில் விட்டு விட்டு சென்றுள்ளார் இதை அறிந்த ஜாகீர்உசேன் அவரை அழைக்க முற்படும்போது அவர் அங்கிருந்து சென்றுள்ளார் உடனடியாக வங்கிக்கு சென்று பணத்தை ஒப்படைத்து விடலாம் என்று சென்றுள்ளார் மாலை நேரம் என்பதால் வங்கி முடிவடைந்து விட்டதாக தெரிவித்ததை தொடர்ந்து இன்று காலை ஆம்பூர் நேதாஜி சாலையில் அமைந்து உள்ள ஸ்டேட் வங்கிக்கு சென்று ஜாகிர் உசேன் அந்த 10000 ரூபாய் பணத்தை வங்கி மேலாளர் விஜய்குமார் அவர்களிடம் ஒப்படைத்தார் வங்கி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இவரை வெகுவாகப் பாராட்டினர் அது மட்டுமில்லாமல் பாரத ஸ்டேட் வங்கி சார்பாக ஜாகீர் உசேனின் நேர்மையை பாராட்டி இவருக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது.      ‌     ‌ ‌

Comments