கொடைக்கானலில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம்

17.06.2020
கொடைக்கானல்

கொடைக்கானலில் இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு இந்து அமைப்பினர் சார்பில் வீரவணக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்தியா சீனா எல்லைப் பகுதியான லடாக் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு பதற்றமான சூழ்நிலை இருந்து வந்தது இந் நிலையில் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்ட மோதலில் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 20−ராணுவ வீரர்கள் இறந்துள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து லடாக் எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் இறந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி கொடைக்கானல் ஏரிச்சாலை அருகே இந்து அமைப்பினர் சார்பில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் இந்து அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.கொடைக்கானல் செய்தியாளர் மா பாண்டியன்.

Comments