தேவதானப்பட்டியில் காய்கறி ஏற்றி வந்த வாகனம் மோதி தூய்மை பணியாளர் பலி

தேவதானப்பட்டியில் காய்கறி ஏற்றி வந்த வாகனம் மோதி தூய்மை பணியாளர் பலி 

     தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளராக கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்பவர் பரமசிவம் வயது 49 இவர் தேவதானப்பட்டி மேல்மந்தை  காலனியை சேர்ந்தவர் .இவர் 6.6.2020 அன்று தனது டூவீலரில் பணியில் இருந்தபோது  தெற்கு தெரு வழியாக பொம்மிநாயகன்பட்டி க்கு சென்ற போது அந்த வழியாக தேனியிலிருந்து ஒட்டன்சத்திரதிற்கு  காய்கறி ஏற்றிவந்த பிக்கப் வாகனம் மோதியதில்  பரமசிவம் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார் .அவரது உடலை தேவதானப்பட்டி காவல் துறையினர் அங்கு சென்று பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர் .இது  குறித்து தேவதானப்பட்டி காவல் துறையினர் வாகன ஓட்டுனரை கைது செய்து  சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேலும்  விசாரணை செய்து வருகின்றன .   

   இவன் ரா .அழகர்சாமி நிருபர் தேனி மாவட்டம்

Comments