மாயனூர் கதவணை பராமரிப்பு பணி


திருச்சி மாவட்டத்தையும் கரூர் மாவட்டத்தையும் இணைக்கும் விதமாக காவிரி ஆற்றில் மாயனூருக்கும் சீலைப்பிள்ளையார் புத்தூருக்கும் இடையில்  கட்டப்பட்ட மாயனூர் கதவணை ஆகும். தென்னக நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல் அணை என்ற பெருமையை பெற்றுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து வருகின்ற ஜுன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் தற்போது மாயனூர் கதவணை  பராமரிப்பு பணியானது மதகுகளுக்கு வர்ணம் பூசுவது இரும்பு தூண்களுக்கு வர்ணம் பூசுவது மற்றும் மணல் அரிப்பு ஏற்பட்ட இடத்தில் தற்போது பொக்லைன் இயந்திரம் மூலம் மணல் அள்ளி போட்டு சமன் செய்யும் பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தாலுகா செய்தியாளர்
P.குருமூர்த்தி
தொட்டியம்.

Comments