கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் நேரில் ஆய்வு.



கடலூர் மாவட்டத்தில் 2020-2021 ஆண்டுக்கான குடிமராமத்து பணிக்கு 500 கோடி ரூபாய் நிதி தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறை சார்பில் கடலூர் மாவட்டத்தில் 9 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் 45 பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடி பெருமாள் ஏரியின் 7 மதகுகள் சீர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் காட்டுமன்னார்கோயில் ஸ்ரீமுஷ்ணம் ஆகிய மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஏரிகள் குளங்கள் கால்வாய்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ்  தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்‌. கடலூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டப் பணிகளின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில். 8 .450 ஹெக்டேர் பாசன நிலங்கள் பயன்பெறும். இரண்டாவது முறையாக குடிமராமத்து பணி செய்து வரும் தமிழக அரசுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

தின காற்று நாளிதழ் செய்திகளுக்காக விருத்தாசலம் தாலுக்கா கடலூர் செய்தியாளர் தெய்வ பாண்டியன்