சிறுவர்,சிறுமியர்,பூங்கா இல்லாத சாத்தூர் நகரம்


சாத்தூர் ஜூன் 9,விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சிறுவர்-சிறுமியர் பூங்கா இல்லாத சாத்தூர் நகரம். சாத்தூரில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் நகரமாகும். சாத்தூர் நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. தீப்பெட்டி தொழில், பட்டாசு தொழில்,நிப்பு கம்பெனி தொழில், சாத்தூரில் நடைபெற்று வருகிறது.
சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து அதிகமாக வத்தல் விளைவித்து வத்தல் வியாபாரத்திற்கு சாத்தூர் முக்கிய நகரமாகும்.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தூர் நகரம் அமைந்துள்ளது. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளூரிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சிவகாசியில் வேலை பார்த்து தங்கள் வருமானத்தை ஈட்டி வருகிறார்கள்.
சாத்தூரில் ஆரம்ப காலத்தில் வெள்ளைகரைரோட்டில் எஸ்.ஆர்.நாயுடு பூங்கா என்று இருந்தது. ஆனால் இன்று ஆட்டுச்சந்தையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் பெரியார் நகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக சிறுவர் பூங்கா திறக்கப்பட்டது இன்று முற்றிலும் சிதிலமடைந்து முட் செடிகளும் புதர்களும் மண்டி அங்கு மாடுகள் மேய்ந்து வருகிறது.
பெரியார் நகரில் மேலும் ஒரு விளையாட்டுத் திடல் நகராட்சி சார்பாக திறக்கப்பட்டது அதுவும் சில வருடங்களிலேயே சிதிலமடைந்து யாரும் விளையாட முடியாத அளவு அனைத்து உபகரணங்களும் உடைந்து உள்ளது. இந்த விளையாட்டு திடலில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு உபயோகப்படுத்தும் பொருட்கள் வைப்பதற்கு இந்த விளையாட்டு திடல் பயன்படுத்தப்படுகிறது.
சாத்தூர் நகராட்சியில் எங்கும் சிறுவர்-சிறுமியர் விளையாடுவதற்க்கும் முதியவர்கள் நடைபயிற்சி செய்வதற்கும் பூங்கா இல்லாத சாத்தூர் நகரம் உள்ளது. சாத்தூர் நகராட்சி பெரியார் நகரில் உள்ள பூங்காவையும்,விளையாட்டு திடலையும், மறு சீரமைத்து பொதுமக்களுக்கு பயன்படுத்தும் படியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

 சாத்தூர் நிருபர் க.பிரேம் ஆனந்த்..

Comments