கடலூரில் முன்னாள் திமுக எம்எல்ஏ ஐயப்பன் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள்


கடலூர், ஜூன். 8:  கலைஞர் 97-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டும் ,   ஊரடங்கு உத்தரவு காரணமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேற்கொள்ள திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டது தொடர்ந்து  கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம் .ஆர் .கே பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின்படி திமுக முன்னாள் எம்எல்ஏ ஐயப்பன் ஏற்பாட்டின் பேரில் கடலூர் நகராட்சிக்குட்பட்ட 45 வார்டு பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் 500 பேரின் குடும்பங்களுக்கு
 ரூபாய் 3.5 லட்சம் மதிப்பிலான மளிகை , அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. திமுக மாவட்ட அவைத்தலைவர் தங்கராசு, நகர செயலாளர் ராஜா, டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ், லஷ்மி செக்யூரிட்டி தினகரன், நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் நடராஜன், மீனவரணி தமிழரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞானபிரகாசம் , மனோகர், அழகியநத்தம் முத்து, மருதாடு சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தூக்கணாம்பாக்கம் ராதா கிருஷ்ணன், கோண்டூர்  மாயவன், திமுக நிர்வாகிகள் கோவலன், சுந்தரமூர்த்தி, , வழக்கறிஞர் கதிர்வேலன், வனராசு, முகுந்தன், ராமு, அரிஸ்டோ சிவராஜ், ரங்கநாதன், அஞ்சாப்புலி ,  வழக்கறிஞர் வினோத், ராஜா, சன் பிரைட் பிரகாஷ் , இளங்கோ,  நித்யானந்தம் , சிவானந்தம்,  தொமுச கிரி, சித்ராலயா ரவிச்சந்திரன், தமிழ்ச்செல்வன், கோண்டூர் துணைத் தலைவர் சாந்தி, பரத், ஜோதி, ராமு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



படவிளக்கம்

கடலூரில் முன்னாள் திமுக எம்எல்ஏ ஐயப்பன் ஏற்பாட்டின் பேரில் ரூபாய் 3..5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அவைத்தலைவர் தங்கராசு, நகர செயலாளர் ராஜா , டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் பிரகாஷ், லஷ்மி செக்யூரிட்டி தினகரன் மற்றும் திமுக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளனர்.

Comments