கால்நடை வியாபாரத்திற்கான வழிவகையை விரைவில் தமிழக அரசு முன்னெடுக்கவேண்டும். உழவர் உழைப்பாளர் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல். திருப்பூர் பல்லடம் அருகே கோடாங்கி பாளையம் பிரிவு பகுதியில் உள்ள உழவு ஆலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து தலைமையில் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இதில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விவசாயிகளுடைய அனைத்து வகை கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் மேலும் கால்நடை வாங்குவது விற்பது போன்ற விவசாயிகளின் அத்தியாவசிய நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு மாட்டு சந்தைகளை திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்
Comments
Post a Comment