வேதாரண்யம் அருகே தாய் தந்தை இல்லாமல் அனாதையாக இருக்கும்


வேதாரண்யம் அருகே தாய் தந்தை இல்லாமல் அனாதையாக இருக்கும் நான்கு குழந்தைகளுக்கு உதவி கரம் நீட்டினார் வேதாரண்யம் டி.எஸ்.பி. சபியுல்லா .

வேதாரண்யம் ஜூன் 9. 

நாகை மாவட்டம்
 வேதாரண்யம் தாலுக்கா செட்டிபுலம்  கிராமத்தில் தெற்குக் காட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் காளியப்பன் என்பவர் இறந்துவிட அவரது 3 பெண் 1ஆண் என 4 பிள்ளைகளுடன் அவரது மனைவி பராமரித்து வந்த நிலையில் அவரும் கடந்த சில நாட்களுக்கு முன் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார் 4 பிள்ளைகளும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது தனியார் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. இதை அறிந்த வேதாரணியம் காவல்துணை  கண்காணிப்பாளர் திரு சபியுல்லா அவர்கள் நேரில் செட்டிபுலம் சென்று 4 குழந்தைகளையும் நேரில்  சந்தித்து ஆறுதல் கூறி  ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி பருப்பு காய்கறி வகைகள் மாஸ்க்  சனிடைசர் ஆகியவற்றுடன் 5 ஆயிரம் ரூபாய் வீட்டு செலவிற்கு வழங்கி ஆறுதல் கூறினார் அந்த 4 பிள்ளைகள் கல்வி செலவிற்குவேண்டிய உதவிகளை செய்வதாக கூறி ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறு கூறி உதவி கரம் நீட்டி உள்ளார்வேதாரணியம் டிஎஸ்பி சபியுல்லா...

Comments