தேனி மாவட்டம் தேவதானப்பட்டி யில் கொரோனா விழிப்புணர்வு க்காக பேரூராட்சி நிர்வாகத்தால் தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் பேனர் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டன . அந்த பேனர் தேவதானப்பட்டியின் முக்கிய சாலையான காவல் நிலையம் அருகில் ஒரு பேனர் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக கிழிந்து தொங்குவதாகவும் அதை தேவதானப்பட்டி பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் தினந்தோறும் பார்த்துவிட்டு கண்டும் காணாமல் செல்கின்றன எனவும் இந்த பகுதியில் தான் பொதுமக்கள் தினந்தோறும் அதிகமாக கூடும் இடம் எனவும் இந்த பகுதியில் தான் காய்கறி மார்க்கெட் காவல் நிலையம் வாங்கி மாமிச கடைகள் இருப்பதால் இந்த பகுதியில் நாள் தோறும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றன ஆனால் இந்த இடத்தில் இவ்வாறு கிழிந்து தொங்கும் பேனரால் எப்போது வேண்டுமானாலும் உயிர் பலி ஏற்படுமோ என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றன .தமிழகத்தில் பேனரால் ஏற்கனவே பல உயிர் பலிகள் ஏற்ப்பட்டது என்பதை நாம் அறிந்த ஒன்று அப்படி இருக்கையில் இவ்வாறு கிழிந்து தொங்கும் பேனரை அகற்றாமல் அதை கண்டும் காணாமல் தேவதானப்பட்டியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் இருப்பது எதற்காக என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றன .இது போன்று தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று கொண்டுள்ளன இவ்வாறு அலட்சியமாக செயல்படும் பேரூராட்சி நிர்வாகத்தின் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு ...
ரா.அழகர்சாமி நிருபர் தேனி மாவட்டம்