சாத்தூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலி

சாத்தூர்
விருதுநகர் மாவட்டம்
06.06.2020

சாத்தூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலி

சாத்தூர் ஜூன் 7,விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் இருவர் பலி.
சாத்தூர் அண்ணா நகரில் ஜவுளிக்கடை நடத்தி வரும் சந்திரசேகரன்/52, அவரது நண்பர் சாத்தூர் மேல காந்தி நகரைச் சேர்ந்த பாலசுந்தரம்/60, இருவரும் சாத்தூர் அருகே என். வெங்கடேஸ்வராபுரம் நான்குவழிச்சாலை அருகே தனியார் வங்கிக்கு சென்றுவிட்டு அருகில் இருந்த தனியார் பெட்ரோல் பல்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு  திரும்பும் வழியில் எதிரே திண்டுக்கல்லைச் சேர்ந்த குமரேசன் (40) தனது காரில் கயத்தாறுக்கு நான்கு வழிசாலையில்  அதிவேகமாக வந்த போது எதிர்பாராதவிதமாக  இருசக்கர வாகனத்தில் மோதியதில் பலத்த காயத்துடன் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சந்திரசேகரன், பாலசுந்தரம் இருவரும் பலியாகினர். தகவலறிந்த சாத்தூர் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் இப்ராகிம் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.

Comments