கொரோனா அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் வாழ் வாதாரத்துக்கே வழியில்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இப்படி இருக்க அறிவு பசிக்கு எவ்வாறு இடம் கொடுக்க முடியும். ஆன்லைன் வகுப்புகள் சில மாணவர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக ஏழை மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்பது எப்படி என்பது கூட தெரியாமல் உள்ளனர். அவர்களது பெற்றோருக்கும் ஆன்லைன் வகுப்பு தொடர்பான விவரம் ஓரளவு தெரிந்தால்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட முடியும். ஒரு மாணவனை நல்வழிப்படுத்த ஆசிரியரால் மட்டுமே முடியும். ஆன்லைனில் எப்படி மாணவர்களை நல்வழியில் நடத்த முடியும். ஆன்லைன் வகுப்புகளை காட்டிலும் பள்ளிக்கூட வகுப்புகள் தான் சிறந்தது.
Comments
Post a Comment