விருத்தாசலம் பள்ளிகளுக்கு பசுமை பார்வை அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் வழங்கினார்
விருத்தாசலம் ஏகே பசுமை பார்வை அமைப்பின் சார்பில் தனியார் பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கபட்டது
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருத்தாசலத்தில் உள்ள விருதை விகாஸ் பள்ளி மற்றும் பாத்திமா மேல்நிலைப் பள்ளிகளுக்கு , ஏகே பசுமை பார்வை அமைப்பு சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏ கே பசுமை பார்வை அமைப்பு தலைவர் வழக்கறிஞர் அகிலன் , மாவட்ட கல்வி அலுவலர் பாண்டித்துரையிடம் மரக்கன்றுகளை வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் தலைமை ஆசிரியர்கள் மும்தாஜ் பேகம், செல்வகுமார், காலமேகம், சேகர், ஜெஆர்சி, கன்வீனர் சேகர் ,கனகராஜ் ஆகியோர் உடனிருந்தனர்
நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் , ஆசிரியைகளுக்கும் மரக்கன்றுகளை வழக்கறிஞர் அகிலன் வழங்கினார்
Comments
Post a Comment