கொடைக்கான‌லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று

கொடைக்கான‌லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


திண்டுக‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கான‌ல் அண்ணா ந‌க‌ரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதத்திற்கு  முன்பு சென்னையில் உள்ள அவர்களது உறவினர் வீட்டிற்கு  குடும்பத்தினருடன்  சென்றுள்ளனர். தற்போது சென்னை பகுதியில் கொரோனா தொற்று அதிகமாக பரவிவரும் நிலையில் அங்கிருந்து கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு இ பாஸ் மூலம் சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு தனது மனைவி, மகனுடன்  வந்துள்ளனர். வரும் வழியில் அவர்களை கொடைக்கானல் நுழைவாயில் சோதனை சாவடியில் பரிசோதனை செய்து பிறகு அவர்களை கொடைக்கானல் பகுதிக்குள் அனுமதித்தனர். இதனை தொடர்ந்து இன்று காலை அவர்கள் மூன்று பேருக்கும் எடுத்த சோதனை முடிவில் கொரோனா தொற்று உள்ளதாக உறுதிசெய்யபட்ட நிலையில் அவர்கள் வீட்டிற்கு சென்ற சுகாதாரதுறையினர் அவர்களை  ஆம்புலன்ஸ் மூலம் மூன்று பேரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் வசித்து வந்த குடியிருப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்தும், கிருமி நாசினிகள் தெளித்தும் சுகாதாரதுறையினர்  மற்றும் காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் 
ஏற்க‌ன‌வே கொடைக்கானலில் கொரோனா பாதித்த‌வ‌ர்க‌ள் எண்ணிக்கை 4 ஆக‌ இருந்த நிலையில் தற்போது இந்த மூன்று பேரையும் சேர்த்து மொத்தம் ஏழாக உய‌ர்ந்துள்ள‌தையடுத்து  பொதுமக்களிடையே பெரிதும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது...கொடைக்கானல் செய்தியாளர் மா பாண்டியன்

Comments