திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் முத்தையா(62) அதேப் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(60) இருவரும் நண்பர்கள் கூலித் தொழில் செய்து வருகின்றனர்.
இந் நிலையில் ராமச்சந்திரன் கடந்த சில மாதங்களுக்கு முன் முத்தையாவிற்கு பணம் 6 ஆயிரம் கொடுத்துள்ளார் இதில் 3−ஆயிரம் ருபாயை முத்தையா திரும்ப கொடுத்துள்ளார்.
இந் நிலையில் இன்று மாலை குறிஞ்சி நகர் பகுதியில் இருவரும் மது வாங்கி குடித்துள்ளனர் அப்போது ராமச்சந்திரன் தான் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் முத்தையா கல்லால் ராமச்சந்திரன் தலையில் தாக்கியுள்ளார் கோபமடைந்த ராமச்சந்திரன் மது பாட்டிலை உடைத்து முத்தையாவை பல இடங்களில் தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த முத்தையா கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது குறித்து முத்தையா கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.
கொடைக்கானல் செய்தியாளர் மா பாண்டியன்.