வரவேற்புநாகர்கோவிலை சேர்ந்த

வரவேற்பு

நாகர்கோவிலை சேர்ந்த பிளஸ்-1 மாணவி சன்மதி:- நான் பிளஸ்-1 படித்து விட்டு, தற்போது விடுபட்ட பொதுத்தேர்வுக்கு தயாராகி வருகிறேன். இதற்காக தினமும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கிறேன். காலை 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். ஆன்லைன் வகுப்பில் பிளஸ்-1 விடுபட்ட தேர்வுக்கும், பிளஸ்-2 பாடங்களும் கற்றுத் தரப்படுகின்றன. முதலில் பாடம் நடத்தப்படும். பின்னர் அதிலிருந்து வீட்டுப்பாடம் கொடுத்து, படிக்கச் சொல்வார்கள். மேலும் பாடம் தொடர்பாக வீடியோவும் அனுப்புவார்கள். இந்த வீடியோவை டவுன்லோட் செய்து கற்றுக்கொள்ளலாம். மேலும் எப்போது தேவை என்றாலும் வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ள முடியும். இதனால் ஆன்லைன் வகுப்புகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதே சமயம் என்னுடன் படிக்கும் பலரிடம் செல்போன் இல்லை. எனவே அவர்களால் ஆன்லைன் வகுப்பு மூலம் கற்றுக்கொள்ள முடியவில்லை.

நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த கோகிலா:-

 என் மகன் கோணத்தில் ஐ.டி.ஐ. படித்து வருகிறான். மகள் பிளஸ்-1 வகுப்பில் விடுபட்ட தேர்வு எழுத இருக்கிறாள். 2 பேருமே தற்போது ஆன்லைன் மூலம் பாடம் கற்று வருகிறார்கள். மகனுக்கு தினமும் 3 வகுப்புகள் நடக்கின்றன. அவனுக்கு ஆன்லைனில் தேர்வும் நடக்கிறது. மகளுக்கு பிளஸ்-1 விடுபட்ட தேர்வு நடத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் படிப்பது அவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக கூறுகிறார்கள். வீட்டில் வெகு நாட்களாக சும்மா இருக்கும் போது மாணவர்களின் கல்வி திறன் குறைய வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்க ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு நன்மைதான். எனவே ஆன்லைன் வகுப்பை நான் வரவேற்கிறேன். அனைத்து மாணவர்களும் ஆன்லைன் மூலம் கல்வி கற்க வேண்டும்.

Comments