திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தந்தையை பார்க்க சென்ற ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடசேரி பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் இவர் எலக்ட்ரிஷன் ஆக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் இவரது வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் புதிய வீடு ஒன்று கட்டி வருகிறார் கட்டும் பணியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் கார்த்தியை பார்க்க அவரது ஒன்றரை வயது மகன் பூவை மித்திரன் வீதியில் விளையாடி கொண்டு தந்தையை பார்க்க செல்வம் அவரது வீட்டுக்கு சென்று உள்ளார் அப்போது அங்கு தோண்டப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து தண்ணீரில் மூழ்கி உள்ளார் உடனடியாக அவரது தந்தை குழந்தையை மீட்டு அங்கிருந்து வாணியம்பாடி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்த போது அதனை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையை உயிரிழந்ததாக தெரிவித்தனர் அதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினகாற்று நாளிதழ் செய்திகளுக்காக ஆம்பூர் செய்தியாளர் ஏஸ்.எம்.புவனேஸ்வரன்