கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

பொள்ளாச்சி ராஜா மில் ரோடு பகுதியை சேர்ந்த திருமூர்த்தி 46 மாற்றுத்திறனாளியான இவர் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள சுமார் 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தார் அந்த கிணற்றில் 40 அடி தண்ணீர் இருந்தது இதனால் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த திருமூர்த்தி கிணற்றுக்குள் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்னை காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார் உயிருக்கு போராடியபடி சத்தமிட்ட திருமூர்த்தி அவ்வழியாக வந்த பொதுமக்கள் கிணற்றுக்குள் என்ன சத்தம் கேட்கிறது என்று எட்டிப் பார்த்தனர் அப்போது கிணற்றுக்குள் தத்தளித்துக்கொண்டிருந்த திரு மூர்த்தியை மீட்பதற்காக உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் விரைந்து வந்த பொள்ளாச்சி தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி திருமூர்த்தி பத்திரமாக மீட்டனர் பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு இப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்