கரோனா தொற்று அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், பொன்னேரி பேரூராட்சியில் ஒரு வாரத்துக்கு கடைகளை மூட வியாபாரிகள் சம்மதம் தெரிவித்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சி எல்லைக்குள் 4 வியாபாரிகள் உள்பட 29 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், முதியவா் ஒருவா் தொற்றால் உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, பொன்னேரி பேரூராட்சி நிா்வாகம், சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள வியாபாரிகளை அழைத்து, பேரூராட்சி அலுவலகத்தில் பேச்சுவாா்த்தை நடத்தியது. அதில், பொன்னேரி நகரில், கரோனா தொற்று அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, பேரூராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், திங்கள்கிழமை (ஜூன் 15) முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை கடைகளை அடைக்க வியாபாரிகள் சம்மதம் தெரிவித்தனா். அப்பகுதி உள்ள கடைகளுக்கு அனைத்தும் அரசு மருத்துவமனை வளாகத்திலும் கிருமி நாசினி தெளித்து வரப்படுகிறது
Comments
Post a Comment