இந்த கொரோனா ஊரடங்கு காலம் பலருடைய வாழ்க்கையில் பல மாறுதல்களையும் திருப்பங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஹரியானாவில் இருந்து காணாமல் போனவரை அவர்கள் குடும்பத்தோடு சேர்த்து வைத்து, திருச்சி காவல் அதிகாரி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஹரியானா மாநிலம் பஹதுர்ஷா மாவட்டத்தை சேர்ந்தவர் நிதேஷ். இவருடைய தந்தை சுபோஸ் சர்மா. சில நாட்களுக்கு முன்பு நிதேஷை காணவில்லை என ஹரியானா மாநிலத்தில் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நிதேஷை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையர் மணிகண்டன், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பஞ்சப்பூர் அருகே நிதேஷை கண்டுள்ளார். பின் அவரை விசாரித்து அழைத்து வந்து இரண்டு நாட்களுக்கு புது ஆடைகள் எடுத்து கொடுத்து கங்காரு கருணை இல்லத்தில் சேர்த்தார்.
Comments
Post a Comment