திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் காவல்துறை சார்பில் முககவசம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் காவல்துறை சார்பில் முககவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு 1 ரூபாயில் முககவசம் வழங்குவதை காவல்துறை துணை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை, பேருந்து நிலையம், காய்கறி மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் முகக்கவசம்  (மாஸ்க்) அணியாமல் வரும் பொதுமக்களுக்கு திருநங்கைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி 1 ரூபாய்க்கு ஒரு முகக் கவசம் வழங்குவதை ஆம்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் நகர காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் தொடங்கி வைத்தனர்.

 மேலும் ஆம்பூர் நகர அனைத்து காவலர்களுக்கும் ஆம்பூர் முழுவதும் மாஸ்க் அணியாமல் இருசக்கர வாகனத்தில் 2 நபர் 3 நபர்கள் என சுற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்யுங்கள் என ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.            ‌                      ஆம்பூர் தாலுகா செய்தியாளர் ஏஸ்.எம்.புவனேஸ்வரன்

Comments