*தமிழ்நாடு சவரத்தொழிலாளார் சங்கத்தினர்கள் செங்கல்பட்டுமாவட்ட ஆட்சியரிடம் வாடிக்கையாளாிடம் ஆதார் பெறுவது கட்டாயம் என்பதை தளர்த்தகோரி கோரிக்கை*
*செங்கல்பட்டுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சவரத்தொழிலாளார் சங்கம் காஞ்சிசெங்கல்பட்டு மாவட்டம் அளவில் சலூன் கடைகள் நடத்திவரும் சவரத்தொழிலாளார்கள் சார்பில் ஒருங்கிணைந்த கோரிக்கை மனு ஓன்றிணை மாவட்டத்தலைவர் ஏ.சண்முகம் , மாவட்டச்செயலாளார் கொளத்தூர் எம்.ருக்மாங்கதன் , மாவட்ட பொருளாளா் ஜி.ராஜீவ்காந்தி ஆகியோர்கள் கூட்டாக வழங்கினார்கள் .இதுகுறித்து அவர்கள் செய்தியாளார்களிடம் கூறுகையில் நாங்கள் வழங்கிய மனுவாவது என்னவென்றால் தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் 24ஆம்தேதி முதல் சலூன்களை மூடவேண்டும் என அரசு அறிவித்திருந்தது. தமிழக முதல்வர் அவர்களுக்கும் ,மாவட்ட ஆட்சியருக்கும் சங்கத்தின் சார்பாக பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு இரண்டு மாதங்களுக்கு பிறகு தற்பொழுது பல்வேறுகட்டுப்பாடுகளுடன் கடைதிறக்க அனுமதி அளித்தது. எனினும் கடைக்கு வரும் வாடிக்கையாளார்களிடம் ஆதார் எண்ணை கட்டாயமாக வாங்கவேண்டும் என்று அரசு கூறியுள்ளது. வாடிக்கையாளார்களிடம் ஆதார் எண் வாங்குவது மிகவும் சிரமமாக உள்ளது. வாடிக்கையாளார்கள் எங்களிடம் ஏன் ? எதற்கு ? என்று கேள்விகளை கேட்டு வாக்குவாதம் செய்துதிரும்ப சென்றுவிடுகின்றனர்கள். ஓருசிலர் ஆதார் எண் தர அஞ்சுகின்றனர்கள். இதனால் எங்கள் தொழில் மேலும் பாதிப்படைகின்றது. எனவே ஆதார் எண் கட்டாயம் பெறவேண்டும் என்பதை தளர்த்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக கூறியுள்ளோம் .மேலும் நாங்கள் அதற்கு ஈடாக வாடிக்கையாளர்களிடம் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் விலாசத்தை பெற்றுத்தர தயராக உள்ளோம் என்றும் மனுவில்தெரிவித்துள்ளோம். அதேப்போல் தமிழக அரசு எங்கள் நலவாரியத்தில் பதிவு செய்யாத முடி திருத்தும் தொழிலாளார்களுக்கு நிவராண உதவியாக ரூ.2000 வழங்குவதாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவா்கள் கடந்த மே மாதம் 16ஆம்தேதி அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நலவாரியத்தில் பதிவு செய்யப்படாத தொழிலாளார்கள் நிவாரண உதவி தொகை பெறுவதற்கான மனுக்களை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அந்தந்த கிராம நிருவாக அலுவலர்களிடம் கொடுத்தால் எங்கள் மனுவை வாங்காமல் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி மனுக்களை வாங்க மறுத்து எங்களை அலைகழித்து வருகின்றனர்கள். ஆகவே தாங்கள் முறையான நடவடிக்கை மேற்க்கொண்டு எங்களின் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் . என்று இருப்பதாக கூறினார்கள். மேலும் அவர்கள் கூறுகையில் மாண்புமிகு தமிழக முதல்வர்கள் அவர்கள் தமிழகம் முழுவதும் எங்கள் சங்கம் சார்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் மனுவை மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கோரிக்கைகளை நிறைவேற்றி ஆணைவழங்கவேண்டும் என லட்சக்கணக்கான சவரத்தொழிலாளார்கள் சார்பாக கேட்டுக்கொள்வதாக கூறினார்கள்.*