கொடைக்கானலில் தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்து வரும் சலூன் கடைகள். தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரோனா எதிரொலியாக ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பின்பு படி படியாக ஒரு சில கட்டுபாடுகளுடன் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக ஊரகபகுதிகளில் இயங்கும் சலூன் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது நகர் பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றுபுற பகுதிகளில் உள்ள 35க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இந்த கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தனியாக சீப் மற்றும் துண்டு எடுத்து வரவேண்டும் எனவும், உள்ளே வரும் போது சானிடைசர் கொண்டு கைகளை கழுவியும் வர வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். குறிப்பாக வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது ஆதார் அடையாள அட்டையை கொண்டு வந்து அவர்களின் முழு விபரங்களையும் தனியாக ஒரு பதிவேட்டில் பதிவு செய்கின்றனர். மேலும் சளி, காய்சல் இருப்பவர்களுக்கு அனுமதிப்பது இல்லை எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து ஒருவருக்கு முடிதிருத்தம் செய்து முடித்தவுடன் லைசால் கொண்டு இருக்கைகள் மற்றும் அந்த அறை முழுவதும் சுத்தம் செய்தும் வருகின்றனர்.தங்களின் வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் சலூன் கடைகளை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு கொடைக்கானல் முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நன்றியினை தெரிவித்துள்ளனர்...மேலும் இந்த தொழிலாளர்கள் தங்களுக்கு கொரன வைரஸ் இல்லை என்பதற்காண சான்றிதழ் வைத்து இருக்க வேண்டும் என கொடைக்கானல் மக்களின் கோரிக்கையாக உள்ளது தங்களின் பாதுகாப்பு கருதி வேண்டுகோள் விடுகிறார்கள். கொடைக்கானல் செய்தியாளர் மா பாண்டியன்