கொடைக்கானல் மக்களுக்காக ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட குடிநீர் ஏரி 500 ஏக்கர் பரப்பளவு கொண்டது இதில் 58 ஏக்கர் பரப்பளவு நீர்ப்பிடிப்பு ஆனது மீதமுள்ள 442 ஏக்கர் நிலப்பரப்பு புல்வெளியாக இருந்தது தற்பொழுது புல்வெளிகள் மறைந்து ஒரு நிலை தாவரமாக ஆகிவிட்டது 500 ஏக்கருக்கும் சுற்றி பாதுகாப்பிற்காக கம்பிவேலி அமைக்கப்பட்டு இருந்தது காலப்போக்கில் கம்பிவேலி முற்றிலும் மறைந்துவிட்டது கம்பி வேலியை பராமரிக்காமல் விட்டது தான் காரணம் நம் நாடு சுதந்திரம் பெற்ற பின் ஆங்கிலேயர்கள் இங்கிருந்து சென்றபின் அந்த காலத்திலிருந்து நகராட்சி நிர்வாகம் இந்த குடிநீர் ஏரியை பராமரித்து வருகிறது புல்வெளிகள் மறைந்து ஒரு நிலை தாவரம் மரங்கள் வளர்வதை கவனத்தில் கொள்ளவில்லை இந்த மரங்கள் மழைநீரை ஏரிக்கு வருவதை தடுக்கிறது மரங்கள் தண்ணீரை உறிஞ்சப்படுகிறது இந்த மரங்கள் நம் நாட்டை சேர்ந்தவை அல்ல வெளிநாட்டை சேர்ந்த மரங்கள் இவை அனைத்தும் நீரை அதிகம் உறிஞ்சும் தன்மை கொண்டது இப்படிப்பட்ட மரங்களை அகற்றிவிட்டு புல்வெளிகள் ஆக 442 ஏக்கரையும் மாற்றினால்தான் மழைநீர் தங்குதடையின்றி ஏரிக்கு வந்து சேரும், காலங்கள் மாற மாற மக்கள்தொகையும் உயர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் குடி நீரின் அளவும் அதிகமாக தேவைப்படுகிறது ஏரியின் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது இதை கவனத்தில் கொண்டு ஏரியின் தண்ணீர் அளவை உயர்த்துவதற்கு ஒருநிலை தாவரங்களை அகற்றி விட்டு புல்வெளிகள் ஆக மாற்ற வேண்டும் நான் இந்தக் கோரிக்கையை பல இடங்களில் பல மேடைகளில் நகராட்சி நிர்வாகத்திற்கு எடுத்து வைத்துள்ளேன் இனிமேலாவது இந்த விஷயத்தை கையில் எடுத்து நகராட்சி நிர்வாகம் கொடைக்கானல் வாழ் மக்களுக்கு குடிநீர் பஞ்சத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தற்பொழுது 10 நாள் 15 நாளுக்கு ஒருமுறைதான் நீர் வருகிறது அதுவும் குறைந்த அளவே நீர் வருகிறது தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க வேண்டும் நகராட்சி நிர்வாகம் என கூறுகிறார்
மக்கள் போராளி தனி ஒருவன் சமூக ஆர்வலர் திரு ராஜ் மோகன் அவர்கள்
Comments
Post a Comment