வேப்பூர் தாலுக்காவை சேர்ந்த சாராய வியாபாரி பனையாந்தூர் சுரேஷ் தடுப்புக்காவலில் கைது





வேப்பூர் பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி பனையந்தூர் சுரேஷ் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யபட்டார் 


கடலூர் மாவட்டம், 
 வேப்பூர் காவல் நிலைய ஆய்வாளர்  கவிதா மற்றும் சிறுபாக்கம்  போலீசார் மதுவிலக்கு குற்றங்களை தடுக்கும் பொருட்டு  கடந்த 28-5-2020 அன்று  வேப்பூர் அடுத்த சிறுபாக்கம் அருகிலுள்ள  பனையாந்தூர் கருவேல்தோப்பு அருகில்  கண்காணித்து கொண்டிருந்தபோது 
2 சாக்குப்பையில் 120 லிட்டர் சாராயம் எடுத்துக்கொண்டு
அவ்வழியே வந்தவரை   மடக்கிப்பிடித்து  விசாரணை செய்த போது  சிறுபாக்கம் அருகிலுள்ள பனையந்தூர் அய்யாசாமி மகன் சுரேஷ் (வயது 38)  என தெரியவந்தது அதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கவிதா சுரேஷை   கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார் 


இவர் மீது சிறுபாக்கம்  காவல் நிலையம்,  மற்றும் விருத்தாச்சலம் மதுவிலக்கு அமல்  பிரிவு காவல் நிலையத்தில்  மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன அதனால், 
இவரின் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஸ்ரீ அபிநவ்  பரிந்துரையின் பேரில் , கடலூர் மாவட்ட ஆட்சியர்  அன்புச்செல்வன்  சுரேஷை  ஓராண்டு காலம் குண்டர் தடுப்பு காவலில் வைக்க உத்திரவிட்டார்,

அதை தொடர்ந்து  பனையந்தூர் சுரேஷ்    ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில்  வைக்கப்பட்டார் இதற்கான உத்தரவை கடலூர் மத்திய சிறை அலுவலர்கள் மூலம்  சுரேஷிடம் வழங்கபட்டது