பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையிலிருந்து முதல்வர் உத்தரவின்படி

பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணையிலிருந்து முதல்வர் உத்தரவின்படி முதல் போக நெல் சாகுபடிக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் S.P. தண்ணீர் திறப்பு . விவசாயிகள் மகிழ்ச்சி 

பொள்ளாச்சி ஜீன் : 07

பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர்  திறக்கப்பட்டது.  இன்நீரை பயன்படுத்தி ஆனைமலை ஒன்றியத்தில் 2 போகத்தில் நெல், கரும்பு, வாழை சாகுபடி செய்யப்படுகிறது ஒரு போகத்தில் மட்டுமே 6400 ஏக்கர் பாசனம் நடைபெறுகிறது. முதல் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டார் அதை அடுத்து இன்று முதல் அக்டோபர் 31 வரை தொடர்ந்து 146 நாட்களுக்கு 1156 மில்லியன் கனஅடி தண்ணீர் வழங்கப்படும். இதனால் ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் இந்த நிகழ்வில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி மாவட்ட எஸ்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments