திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம் மல்லப்பள்ளி ஊராட்சி கண்ணைய நகரை சேர்ந்த திருமதி சத்யா (வயது 45) க/பெ கண்ணையன் என்பவர் கள்ளத்தணமாக வீட்டில் மலை சாராயம் விற்பனை செய்வதாக தகவல் அறிந்து மல்லப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் அம்மணாங்கோயில் வருவாய் ஆய்வாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மேற்படி வீட்டில் இன்று 05.06.2020 காலை 8.00 மணியளவில் நேரில் பார்வையிட்டு பதுக்கி வைத்திருந்த சுமார் 35 லிட்டர் மலை சாராயம் கைப்பற்றப்பட்டது மேற்படி வாணியம்பாடி கலால் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த நபரை கடந்த 30.03.2020 அன்று இதே வீட்டில் 40 லிட்டர் மலை சாராயம் கைப்பற்றி கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.