ஆழியார் அணையில் இருந்து நாளை முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு முதல்வர் உத்தரவு


கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவில் உள்ள ஆழியார் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர் அதை ஏற்று ஆழியார் ஐந்து பழைய வாய்க்கால் வழியாக நாளை ஜூன் 7 முதல் அக்டோபர் 31 வரை 1156 மில்லியன் கன அடி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டுள்ளார் இதனால் ஆனைமலை தாலுகாவில் உள்ள 6400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் ஆனைமலை பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்