வேலூர் மாவட்டம். எம்.பி, எம்.எல்.ஏக்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிருப்பு

வேலூர் மாவட்டம். எம்.பி, எம்.எல்.ஏக்கள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் கைது

வேலூர் மாவட்டம் அணைகட்டு தொகுதிக்குட்பட்ட 38 ஊராட்சிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனை, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றக்கோரி பல முறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிராம ஊராட்சி நிர்வாகத்திடமும் மனு அளித்தும் பணம் இல்லாததால் நடவடிக்கை இல்லை என கூறிய உராட்சிய ஒன்றிய அலுவலகத்தை கண்டித்து அணைகட்டு தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் அணைக்கட்டு ஒன்றிய செயலாளர் பாபு மாதனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் அணைகட்டு ஊரட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் 144 தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 க்கும் மேற்பட்ட திமுகவினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.  

 திருப்பத்தூர் செய்தியாளர் அஸ்லாம்

Comments