சிதம்பரத்தில் 21 வயது இளைஞர் கொலை

சிதம்பரத்தில் 21 வயது இளைஞர் கொலை. காதல் விவகாரத்தில் கொலை நடந்ததாக தகவல். 4 பேரிடம் போலீசார் விசாரணை

              கடலூர்  மாவட்டம் தம்பரம் நகரில் உள்ள வஉசி தெருவில் வசித்து வருபவர் ஆறுமுகம். மகன் அன்பழகன் (21, இவர் இன்று இரவு சிதம்பரம் ஞானப்பிரகாசம் குளக்கரை எதிரில் உள்ள ஒரு மாடி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

            அப்போது அங்கு கைகள் கட்டப்பட்ட நிலையில் அன்பழகன் சடலமாக கிடந்தார். அவரது தலையில் வெட்டு காயங்கள் மற்றும் உடலில் சில இடங்களில் வெட்டுக் காயங்கள் இருந்தது. இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். பின்னர் அன்பழகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

          போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், இறந்த அன்பழகனும் அவர் சடலமாக கிடந்த வீட்டில் உள்ள ஒரு பெண்ணை காதலித்ததாகவும், இந்த காதல் விவகாரத்தில் கொலை நடந்திருக்கலாம் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசார் அந்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments