திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழக அரசு சார்பில் 10-ம் வகுப்பு பொது தேர்வு வரும் 15-ந்தேதி
நடைபெறவுள்ளதாக பள்ளி கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து கொடைக்கானலிலுள்ள நகரம்,கீழ்மலை,மேல்மலை
ஆகியப் பகுதிகளிலுள்ள 25-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார்
பள்ளிகளை சேர்ந்த 1092- மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் .
கொடைக்கானல் நகர்ப்பகுதிகள், மேல்மலைப்பகுதியான பூம்பாறை
,மன்னவனுர் ,கீழ்மலைப் பகுதியான பண்ணைக்காடு பகுதிகளில் 10-ம்
வகுப்பு படிக்கும் மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு
எழுதுகிறார்கள் .
இதற்காக கொடைக்கானல் உள்ளிட்ட தேர்வு எழுதும் பள்ளிகளில்
நகராட்சி ,ஊராட்சி ஒன்றிய தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யும்
பணிகளிலும்,கிருமி நாசினி தெளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு
வருகின்றனர் .இதனை தொடர்ந்து தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
அடையாள அட்டை (ஹால் டிக்கெட்) மற்றும் முக கவசம் வழங்கும்
நிகழ்ச்சி இன்று கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி ,புனித ஜான்
பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,ஆர்.சி உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில்
தொடங்கியது .மாணவர்கள் ஆர்வமுடன் ஹால் டிக்கெட் மற்றும் முக
கவசங்களை வாங்கி செல்கின்றனர் .
தேர்வு நடைபெறும் மையங்கள் தூய்மை பணியாளர்கள் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..
கொடைக்கானல் செய்தியாளர் மா பாண்டியன்
Comments
Post a Comment