சாத்தூர் மே 31,விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கிருஷ்ணாபுரத்தில் ஒருவருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மாரீஸ்வரன் /38 மும்பையில் வாடகைக்கு கார் வைத்து தொழில் செய்து வருகிறார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தால் அவர் கடந்த மே 21 ம் தேதி குடும்பத்துடன் சொந்த கிராமம் கிருஷ்ணாபுரம் வந்துள்ளார் .கடந்த சில தினங்களாக மாரீஸ்வரன் (38) காய்ச்சல் இருந்துள்ளது .அதனால் அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சளி மற்றும் ரத்தம் எடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
மாரீஸ்வரனை சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு மருத்துவதுறையினர் அழைத்து சென்று அனுமதித்துள்ளனர் .அவருடன் இருந்த மனைவி சுமதி(29) மகன் கோபு (9)மகள் சரன்யா(7) ஆகியோருக்கு சளி மாதிரி சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு கிருஷ்னாபுரத்தில் உள்ள வீட்டில் தணிமைபடுத்தபட்டு சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட கிருஷ்ணாபுரத்தில் தாயில்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த வட்டாரா மருத்துவ அலுவலர் செந்தட்டிகாளை குழுவினர் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். கிருஷ்ணாபுரம் முழுவதும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களைகண்டுபிடித்து அவர்களை சோதனை செய்து தனிமைபடுத்தபடும் பணியில் மருத்துவ குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணாபுரத்தில் ஊர் எல்லைப்பகுதியில் தடுப்பு கம்பிகள் வைத்து ஊர் முழுவதும் காவல்துறையினர் மற்றும் சுகாதாரத் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
Comments
Post a Comment