செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட மேல்நிலை தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம் .

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட மேல்நிலை பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கான முடிவுகள், மே மாதம் 2020 வருடத்திற்கான விடைத்தாள் திருத்தும் பணி 27.05.2020 முதல் மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ் தலைமை மற்றும் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டன. செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி முதன்மை மையமாகவும், எஸ்.டி.ஏ . மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளிகள் கூடுதல் மையமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் புனித தோமையார் மலை கல்வி மாவட்டமான கிழக்கு தாம்பரத்தில் அமைந்திருக்கும் ஜெயகோபால் கரோடியா தேசிய மேல்நிலை பள்ளி முதன்மை மையமாகவும் ,எம்.சி.சி. மெட்ரிக் மேல்நிலை பள்ளி, கிரைஸ்ட் கிங் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, வள்ளுவர் குருகுலம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி, வள்ளுவர் குருகுலம் சி.பி.எஸ்.சி.பள்ளிகள் மொத்தம் 9 மதிப்பீட்டு மையங்களுக்கும் 2,34.777 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்வதற்காக பெறப்பட்டுள்ளன. முதன்மை மையத்திலிருந்து கூடுதல் மையங்களுக்கு விடைத்தாள்களை காவலர் பாதுகாப்புடன் எடுத்து செல்ல மாவட்ட நிர்வாகம் தயார்நிலையில் உள்ளது. மேற்கண்ட மையங்களில் மதிப்பீடு நடைபெறும் அனைத்து வகுப்பறைகளும கிருமி நாசினி மூலமாக தினமும் சுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. மையங்களுக்கு வரும் அனைத்து ஆசிரியர்கள் நுழையும் போது உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டு பின்னர் கைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. வருகைதரும் ஆசிரியர்களுக்கு 18 வழிதடங்களில் 888 ஆசிரியர்கள் மதிப்பீட்டு பணியினை சிரமமின்றி மேற்கொள்ள 33 பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளன. அனைத்து ஆசிரியர்களுக்கும் முக கவசத்தோடு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டன. மேலும் 7500 முககவசம் தயார் நிலையில் உள்ளன. தடைசெய்யப்பட்ட பகுதியில் வசிக்கும் ஆசிரியர்களுக்கு பணியிலிருந்து விலக்கு  அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணி சிறப்பாக நடைபெறுவதற்கு 9 மதிப்பீட்டு மையங்களுக்கு 2 முகாம் அலுவலர்களும், 7 கூடுதல் முகாம் அலுவலர்களும் 172 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 172 கூர்ந்தாய்வு அலுவலர்களும், 1056 உதவி தேர்வாளர்களும் 24 மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்களும், 24 அட்டவணையாளர்களும், 25 எழுத்தர்களும், 9 கணக்கு பிரிவு கண்காளிப்பாளர்களும், 2 கணினி ஆசிரியர்களும் 24 அலுவலக உதவியாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள் மதிப்பிடு செய்த அன்றே கணினியின் மூலம் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அனைத்து மைய மதிப்பீடு மையங்களிலும் ரிப்ரெஸ்மென்ட் மற்றும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சமூக இடைவெளியுடன் அனைவரும் பின்பற்ற அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டன. அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு மேற்கொள்ள பணியாளர்கள் அமர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன என மாவட்ட நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

Comments