கொடைக்கானலில் அனுமதியில்லாமல் செயல்பட்ட காட்டேஜ் பூட்டி சீல் வைக்கப்பட்டது


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன மேலும் சுற்றுலாத்தலமான கொடைக்கானலில் ஊரடங்கு நிலவி வருகிறது இதனால் அனைத்து காட்டேஜ்களும், பூட்டப்பட்டுள்ளது இந் நிலையில் சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை கணிசமாக வரத் தொடங்கியுள்ளது .

இதில் கொடைக்கானல் பகுதிகளில் வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு"வீடு இருப்பதால் அவர்களும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்று கொடைக்கானல் வந்து தங்குகின்றனர்.ஆனால் அவர்கள் அவர்களது வீடுகளில்"மட்டுமே தங்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் கொடைக்கானலில் பல்வேறு இடங்களுக்கும் வெளியிடங்களுக்கும் செல்கின்றனர்.

இதையடுத்து கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியில் பாபு என்பவர் விடுதி நடத்தி வருகிறார். இந்த காட்டேஜில் கரூரைச் சேர்ந்த 4− இளைஞர்கள் தங்கி வந்துள்ளனர் இவற்றை நாயுடுபுரத்தைச் சேர்ந்த பொது மக்கள் கொடைக்கானல் காவல் நிலையத்திற்கும் நகராட்சி"அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தனர் 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நகராட்சி அதிகாரிகள் கொடைக்கானலில்  144−தடை உத்தரவு இருந்தும் அனுமதியில்லாமல் காட்டேஜில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த காட்டேஜை நகராட்சி"அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து காட்டேஜில் தங்கியிருந்த கரூரைச் சேர்ந்த செந்தில்,வெற்றிவேல், வசந்த்,வெங்கடேசன் ஆகிய 4−பேரில் செந்தில்,வெற்றிவேல் ஆகிய இருவரை"போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள இரண்டு பேரையும் அவர்கள்"வந்த காரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Comments