ஆழியாறு அணைக்கட்டில் மூழ்கி கோவையை சேர்ந்த ஒருவர் பலி

ஆழியாறு அணைக்கட்டில் மூழ்கி கோவையை சேர்ந்த ஒருவர் பலி

ஆனைமலை அடுத்த ஆழியார் பகுதி ஆற்றுபுறகாலனியில் உள்ள அணைக்கட்டு பகுதி மற்றும் மயிலாடுதுறை அணைக்கட்டு பகுதியில் குளிப்பதற்காக கோவை திருப்பூர் உடுமலை பகுதியை சேர்ந்தவர்கள் குளிக்க வருவது வழக்கமாக கொண்டுள்ளனர் இந்த அணைக்கட்டு பகுதியில் குளிக்க கூடாது என்று காவல்துறை மூலம் எச்சரிக்கை பலகையும் குளிக்க வருபவர்களை குளிக்க கூடாது என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வருகின்றனர் இங்கு குளித்தாள் உயிருக்கு ஆபத்து என்ற செய்தியை பற்றி கடந்த மூன்று நாட்களுக்கு முன் நமது தின காற்று  செய்தி வெளியிட்டோம் இந்த நிலையில் இன்று மதியம் கோவையை சேர்ந்த காஜா உசேன் அனீஸ் இப்ராஹிம் சதீஷ்குமார் என்ற நான்கு நண்பர்கள் இரண்டு இருசக்கர வாகனத்தில் இந்த தடுப்பணை குளிக்க வந்தனர் அவர்களில் ரத்தினபுரி முஸ்தபா மகன் காஜா உசேன் 37 என்பவர் அணைப்பகுதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் இவர் கோவை லாலி ரோட்டில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார் இவருக்கு திருமணமாகி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர் நீரில் மூழ்கிய காஜா உசேனை இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் ஆழமான பகுதிக்குச் சென்று இவர் உடலை மீட்டனர் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது இச்சம்பவம் பற்றி ஆழியார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Comments