கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படி நாளை முதல் அரசு அறிவித்துள்ள தளர்வுகள் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட உள்ளன.
இதில் தனிநபர் கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை காண கடைகள் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப் பட்டுள்ளன மேலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .
இந்நிலையில் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் வண்ணம், நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அலெக்சாண்டர் பிரஸ் ரோடு மற்றும் செம்மங்குடி ரோடு ஆகிய இரு சாலைகள் சீல் வைக்கப்பட்டு , பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை செயல்பட தடை விதிக்க படுகின்றன.